Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஐஸ்வர்யாவை சந்தித்த ராகவா லாரன்ஸ்”… உருக்கத்துடன் கருத்து…!!!

இயக்குனர் ஐஸ்வர்யாவை சந்தித்த பிறகு நடிகர் ராகவா லாரன்ஸ் கருத்துக்களை கூறியுள்ளார்.

ஐஸ்வர்யாவும் தனுஷும் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி பிரிவதாக இணையத்தில் அறிவித்தனர். தனஷை பிரிந்த ஐஸ்வர்யா தற்போது முசாபிர் என்ற காதல் ஆல்பம்பாடலை இயக்கி வருகின்றார். அண்மையில் ராகவா லாரன்ஸ் ஐஸ்வர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறியுள்ளார். இந்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா குறித்து ராகவா லாரன்ஸ் கூறியுள்ளதாவது, “எனது தங்கை ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் அண்மையில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதுபற்றி கருத்து கூற எனக்கு விருப்பமில்லை. அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறி இருக்கின்றார்.

Categories

Tech |