Categories
சினிமா தமிழ் சினிமா

“ஐஸ்வர்யா கூட நான் வாழ மாட்டேன்”…. என்ன வற்புறுத்தாதிங்க…. தனுஷ் திட்டவட்டம்…. சோகத்தில் குடும்பத்தார்கள்….!!

ஐஸ்வர்யாவுடன் திருப்பதி செல்வதற்கான ஏற்பாடுகளை செய்த தனது அப்பாவான கஸ்தூரி ராஜாவை தனுஷ் மிகக் கடுமையாகப் பேசியுள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். இவர்கள் கடந்த மாதம் 17ஆம் தேதி தாங்கள் பிரிய போவதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த தனுஷ், ஐஸ்வர்யா குடும்பத்தார்கள் இருவரையும் எப்படியாவது சேர்த்து வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள்.

இதனையடுத்து ஹைதராபாத்திலிருக்கும் ஐஸ்வர்யா தனது தந்தையிடம் போன் போட்டு நலம் விசாரித்த போது ரஜினி மிகக் கடுமையாக அவரிடம் பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது அப்பாவிற்காக மனமிறங்கிய ஐஸ்வர்யா மீண்டும் தனுஷுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பாக அவரின் தந்தையான கஸ்தூரிராஜாவிடம் பேசியுள்ளார். இதுதொடர்பாக கஸ்தூரி ராஜா தனது மகன் தனுஷிடம் சமாதானம் பேசியுள்ளார்.

இந்நிலையில் கஸ்தூரிராஜா ஐஸ்வர்யாவிடம் இருவரும் உங்களது குழந்தைகளுடன் திருப்பதி மலைக்கு சென்று வாருங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான ஏற்பாடுகளையும் கஸ்தூரிராஜா செய்துள்ளார். இதனை அறிந்த தனுஷ் யாரை கேட்டு இந்த பயணத்தை முடிவு செய்தீர்கள் என கஸ்தூரி ராஜாவிடம் மிகக்கடுமையாக பேசியுள்ளார். அதுமட்டுமின்றி தனக்கு ஐஸ்வர்யாவுடன் வாழ துளிகூட விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |