ஐஸ்வர்யா டுவிட்டரில் பகிர்ந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல ஜோடிகளான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. பிரிவுக்கு பின் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர் ஐஸ்வர்யா. இவர் தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் இவர் இயக்கிய முசாபீர் ஆல்பம் பாடல் வெளியானது. இதை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து துர்கா திரைப்படத்தை இயக்குகிறார். மேலும் பாலிவுட்டில் இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. pic.twitter.com/hWxh7AnD5Y
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 14, 2022
இதைப்போலவே தனுஷூம் தன் கேரியரில் என் கவனம் செலுத்தி வருகின்றார். இவர் தற்போது நானே வருவேன், வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஐஸ்வர்யா சமீபகாலமாக தான் செய்யும் அன்றாட வேலைகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று தனது புகைப்படத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார். இதுபோலவே தனுஷும் நேற்று மாலை தனது அம்மாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனுஷையடுத்து ஐஸ்வர்யாவும் ட்விட்டரில் பகிர்ந்ததை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றார்கள். காலையிலிருந்து சும்மா இருந்துட்டு தனுஷுக்காகவே வீம்புக்கு பண்றீங்களா என கமெண்ட் அடித்து வருகிறார்கள். இதற்கு ஐஸ்வர்யா ரசிகர்கள் இது எதார்த்தமாக நடக்கின்றது என கூறி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.