Categories
சினிமா

“ஐஸ்வர்யா போட்ட ட்வீட்”… கவலையில் ரசிகர்கள்…!!!

ஐஸ்வர்யா ட்விட்டரில் வெள்ளிக்கிழமை எப்படி என கேட்டு பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷை பிரிந்ததில் இருந்து அவரின் கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். பிரிவுக்குப் பின் தமிழில் பயணி என்ற ஆல்பம் பாடலை ஐஸ்வர்யா இயக்கிய வந்த நிலையில் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இதைத் தொடர்ந்து 2 ஹாலிவுட் திரைப் படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யா இணையத்தில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இன்று உங்களின் வெள்ளிக்கிழமை எப்படி என்று கேட்டு அவருடைய இந்த வாரம் குறித்து பதிவிட்டிருக்கிறார்.

பதிவிட்டதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “நல்ல வேலை, ஜும் கால்கள்! சகோதரியுடன் நேரம் கழித்தது.. ஸ்கிரிப்ட் வொர்க், பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு (இது மிகவும் கடினமானது! என் குழப்பமான கூந்தலை தவிர, இந்த வாரம் ஒரு நாளும் காபி இல்லாமல் தொடங்குவது இல்லை. இந்த வாரம் அழகாக சென்றது… தொற்றிக்கொள்ளும் அளவிற்கு புன்னகை! எனவே உங்கள் வெள்ளிக்கிழமை எப்படி இருக்கின்றது” என கேட்டிருக்கின்றார். இதைப் பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு இதுபோன்ற ஒரு காலை வணக்கம் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே” என கூறியுள்ளனர்.

Categories

Tech |