ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு திரைப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் திரில்லர் கதையம்சம் கொண்ட பூமிகா படத்தை ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி நேரடியாக விஜய் டிவியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பூமிகா படத்தில் இடம்பெற்ற மண்ணென்னும் மாயத் தீ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த அழகிய பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.