Categories
சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் “டிரைவர் ஜமுனா”…. படத்தின் டிரைலரை வெளியிட்ட முக்கிய பிரபலம்….!!!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா திரைப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் “காக்கா முட்டை” படம் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தனக்கென்று ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். இவர் விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என்று முன்னணி நடிகர்களின் நடித்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் பா.கின்ஸ்லின் இயக்கம் “டிரைவர் ஜமுனா” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதில் ஆடுகளம் நரேன், ஸ்ரீ ரஞ்சனி, அபிஷேக், ‘ராஜா ராணி’ பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் பினோய் ஒளிப்பதிவு செய்து ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அதனைதொடர்ந்து இந்தப் படத்தை எஸ்.பி.செளத்ரி தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்தநிலையில் இப்படத்தின் டிரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று மாலை 5.15 மணிக்கு சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படியே சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். ட்ரைலர் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கின்றது.

Categories

Tech |