நடிகை ஐஸ்வர்யா ராய் (48) பிரபல இந்தியநடிகை ஆவார். இவர் 1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில மொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இது இரண்டாம் திருமணமாம். ஏனென்றால், அபிஷேக் பச்சனுடன் திருமணத்திற்கு முன் ஐஸ்வர்யாவின் ஜாதகத்தை ஜோசியரிடம் கொடுத்து பார்த்துள்ளனர். அப்போது அவர் ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், வாரணாசியில் கும்ப விவாகம் செய்யும் சடங்கை நடத்த சொல்லியுள்ளனர். வாரணாசிக்கு சென்று ஐஸ்வர்யா ராயின் பக்கத்தில் மரம் ஒன்றை வைத்து, தாலி கட்டி அந்த சடங்கை செய்து முடித்துள்ளனர். இதன்பின் ஐஸ்வர்யா ராய்க்கும் – அபிஷேக் பச்சனுக்கும் திருமணம் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.