தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ள ஜோயிப் மன்னா என்பவரை கடந்த ஆண்டு முதல் தேடி வருகின்றன. இந்நிலையில் உளவுத் துறை அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி உள்ளார் என்று என்ஐஏ போலீசாருக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் படி என்ஐஏ போலீசார் பெங்களூருக்கு சென்று ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசரணையில் இவர் இளைஞர்களின் மூளையை செலவு செய்து பயங்கரவாத அமைப்பில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.
மேலும் இந்தியாவிலிருந்து துருக்கி வழியாக பல இளைஞர்களை சிரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி திரட்டியதாக பெங்களூருவில் அரிசி வியாபாரி இர்பான் நசீர், தமிழகத்தை சேர்ந்த வங்கி ஊழியர் அகமது அப்துல் காதர் மற்றும் டாக்டர் முகமது துக்கீர் மொகபூப் ஆகியோரை என்.ஐ.ஏ போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது அவர்கள் என்ஐஏ கட்டுப்பாட்டில் உள்ளனர்.