ஐபிஎல் 2021 மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின்டெண்டுல்கர் மகன் அர்ஜூனை ஏலத்தில் எடுத்துள்ளனர்.
ஐபிஎல் 2021 சீசன்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி வீரராக சச்சின் டெண்டுல்கரின் மகனாகிய அர்ஜுனை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ஜுன் பேசுகையில், அவர் சிறுவயதிலிருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன், என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளருக்கும், சப்போர்ட் ஸ்டாப்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவதற்கு காத்திருப்பதாகவும் அணியில் இணைய ஆர்வமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.