இந்திய கடற்படைக்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் எனும் விமானம் தாங்கி போர்கப்பல் கட்டப்பட்டுள்ளது. ரூபாய்.20 ஆயிரம் கோடி செலவில் முழுக்கமுழுக்க உள் நாட்டிலேயே இந்த போர் கப்பலானது தயாரிக்கப்பட்டது. கேரளா கொச்சியிலுள்ள கப்பல் கட்டும் தளத்தில் இதற்குரிய கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. கப்பல் கட்டும் பணியானது முடிவடைந்ததை அடுத்து சோதனை ஓட்டம் நடந்தது. இதன் 4வது மற்றும் இறுதிகட்ட சோதனை ஓட்டம் சென்ற ஜூலை மாதம் 28ம் தேதி நடந்தது.
சோதனை ஓட்டத்தில் வெற்றி பெற்றதை அடுத்து இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியானது செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் இதற்குரிய விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு போர்கப்பல் ஐ.என்.எஸ். விக்ராந்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த ஏற்பாடுகளை கொச்சி கடற்படை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். செப்டம்பர் 2ஆம் தேதி கடற்படையில் இணையவுள்ள ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் 1700வீரர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.
கப்பலின் மேல்தளத்தில் மிக் 29 ரக விமானங்கள், காமோவ் 31 ரக ஹெலிகாப்டர்கள், எம்.எச்,60 ஆர் ரக ஹெலிகாப்டர்கள் இறங்கவும், பறந்து செல்லவும் வசதிகள் இருக்கிறது. அத்துடன் கடற்படை வீரர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் செயல்பாட்டுக்கு வந்ததும் இந்தியபெருங்கடல் பகுதியில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பு வலுப்படும். அதுமட்டுமின்றி கடல் கண்காணிப்பும் அதிகரிக்கும். பின் விமானம்தாங்கி கப்பலை உள் நாட்டிலேயே தயாரிக்கும் வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இதன் வாயிலாக இந்தியாவும் இணைந்துள்ளது.