Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.ஐ., செட் தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி …. உச்சநீதிமன்றத்தில் வழக்கு…..!!!

நாடு முழுவதும் கொரோனா அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதனால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கியமான தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மருத்துவ மேற்படிப்பு சேர எய்ம்ஷால் நடத்தப்படும் ஐஎன்ஐசெட் தேர்வுகளை ஒத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏராளமான மருத்துவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் உள்ளதால் தேர்வை எழுத இயலாது. தற்போதைய சூழ்நிலையில் தேர்வு நடத்தினால் பல ஆயிரம் மருத்துவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நீட் பிஜிபி தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் எய்ம்ஸ் தேர்வு நடத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளது.

Categories

Tech |