Categories
கால் பந்து விளையாட்டு

ஐ.எஸ்.எல். கால்பந்து: ராய் கிருஷ்ணா ஹாட்ரிக், ஃபிளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்திய ஏடிகே!

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி 3- 1 என்ற கோல்கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஆறாவது சீசனில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவின் ஏடிகே அணி, ஜாம்சத்பூர் அணியை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் முதல் பாதி ஆட்டத்தில் கோல் ஏதுமின்றி சமநிலைவகித்தது.

இதனையடுத்து தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஏடிகே அணியின் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 49’ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஏடிகே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையுடன் இரண்டாம் பாதி ஆட்டத்தை தொடங்கியது.

அதில் ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா கோலடித்து அசத்த ஏடிகே அணியின் வெற்றியானது உறுதியானது.

அதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 60’, 63’ஆவது நிமிடங்களில் ராய் கிருஷ்ணா அடுத்தடுத்து இரு கோல்களை அடித்ததும் ஆட்டம் மொத்தமும் ஏடிகே அணிக்கு சாதகமானது.

அதனைத்தொடர்ந்து ஒடிசா அணியின் மனுவல் ஒன்வூ ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.

இருப்பினும் ஒடிசா அணியால் ஆட்டநேரமுடிவு வரை ஒரு கோல் மட்டுமே அடிக்கமுடிந்ததால் ஏடிகே அணி 3-1 என்ற கோல்கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஏடிகே அணி இந்த சீசனில் 33 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தையும், ஃபிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற்றும் அசத்தியுள்ளது.

Categories

Tech |