மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழு வருடங்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி மாருதி ஹரி சாவந்த் நான்கு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எட்டு முதல் 13 வயதுக்குட்பட்ட நான்கு சிறுமிகளை சாக்லேட்டுகள் மற்றும் இனிப்புகள் கொடுத்து அவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு சிறுமிகளிடம் அத்துமீறி உள்ளார்.இந்த குற்றத்திற்காக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 7,189 ஆபாச படங்கள் மற்றும் 443 குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ஆபாச வீடியோக்கள் அவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்கில் இருந்துள்ளது. இந்நிலையில் கலந்த வாரம் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.