எம்.ஜி.எம் மருத்துவமனையில் ஒருவர் எலி கடித்து உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஸ்ரீனிவாஸ் என்பவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவர் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் இருந்துள்ளார். இவரை திடீரென எலி ஒன்று கடித்துள்ளது. இவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக ஸ்ரீனிவாசை மேல் சிகிச்சைக்காக நிம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றினர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஸ்ரீனிவாஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீனிவாசனின் சகோதரர் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் எனது சகோதரர் ஸ்ரீனிவாசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது ஸ்ரீனிவாசை எலி கடித்து அவரது படுக்கை முழுவதும் ரத்தமாக இருந்தது என்றார். ஆனால் இதற்கு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதாவது ஸ்ரீனிவாசனுக்கு அதிக அளவு மது பழக்கம் இருந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.எம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு துறைத்தலைவர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.