ஐ.டி.ஐயில் பெஞ்ச், நாற்காலி ஆகியவற்றை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு ஐ.டி.ஐ ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஐ.டி.ஐயில் இருந்த மரபெஞ்ச், டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் சிலர் திருடி சென்றனர். இதுகுறித்து ஐ.டி.ஐ. முதல்வர் குமாரவேல் பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த அப்துல் சமது, அல்லிராஜா, பாலமுருகன் ஆகியோர் ஐ.டி.ஐக்குள் புகுந்து பொருட்களை திருடி அதனை சரக்கு வாகனம் மூலம் கொண்டு சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.