ஐடி ரெய்டுக்கும் தேர்தல் ஆணையருக்கும் தொடர்பு இருப்பதாக துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது தேர்தல் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் சட்ட ஒழுங்கு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி பணமெடுத்து சென்றால் அது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் பல இடங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் தங்கியிருந்த கல்லூரி உள்ளிட்ட இடங்களில் ஐடி ரெய்டு நடைபெற்றது. ஆனால் இதில் எதுவும் சிக்கவில்லை என்று துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். தேர்தல் ஆணையர் முன்கூட்டியே கருத்து தெரிவித்ததால் அவருக்கும் வருமான வரி சோதனைக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.