செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டிஎம்கே ஐ.டி விங் இளையராஜா அவர்களை பற்றி தரக்குறைவாக ட்ரெண்ட், ஹேஷ்டாக் எல்லாம் செய்தார்கள். இதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நானும், நம்முடைய தலைவர்களும், நம்முடைய அமைச்சர்கள் முருகன் அவர்களும், அதேபோல் பாரதிய ஜனதா கட்சியில் இதற்கு முன்பு தலைவியாக இருந்து, இப்போது அவருக்கும் கட்சிக்கும் கூட உறுப்பினர் கிடையாது…
தமிழிசை சவுந்தரராஜன் அக்கா தெலுங்கானாவின் ஆளுநர், புதுச்சேரியின் அட்மினிஸ்ட்ரேட்டர் அவர்களும் கருத்து சொல்லி இருக்கிறார்கள். இந்த அடிப்படையில்தான் நட்டா ஜீ அவர்களும் கருத்து சொல்லி இருக்கின்றார். கருத்து சொல்வதற்கெல்லாம் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு பிடிக்கவில்லை. அவர்களை நாங்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்வோம் என்றால் என்ன சமூகநீதி என அந்த கட்சியை சொல்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி…
சமூக நீதியை பேசக்கூடிய நீங்களே சொல்லக்கூடிய கருத்தை விரும்பவில்லை என்றால்…. அதற்கு இந்த மாதிரி தரக்குறைவான விமர்சனம் செய்கிறோம் என்றால் உங்களுடைய சமூக நீதி என்பது போலி சமூக நீதி என்தை தமிழக மக்கள் பார்த்துவிட்டார்கள், முடிவு செய்துவிட்டார்கள். இதுதான் பாரதிய ஜனதா கட்சி வைக்கக்கூடிய விவாதம்.
எப்படி நான் போட்ட மெட்டுக்களை திரும்ப வாங்க மாட்டேனோ, அதே போல பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்ககளை பற்றி சொன்ன கருத்துக்களையும் நான் திரும்ப வாங்க மாட்டேன். மோடி அவர்கள் செய்கின்ற சாதனையை யாரோ, ஒரு நான்கைந்து பேர் சேர்ந்து மறைத்து விட்டால் மோடி அவர்கள் தமிழக மக்களுக்கு நல்லது செய்யவில்லை, சாதனை செய்யவில்லை என்று ஆகிவிடுமா ?
நான் சொன்ன கருத்துக்கள் அனைத்துமே, இந்த புத்தகத்தை முழுமையாகப் படித்துவிட்டு…. பிரதமர் நரேந்திர மோடி அவர்களை முழுமையாக ஆராய்ந்து விட்டு, என்னுடைய சொந்த கருத்தாக பதிவு செய்து இருக்கும்போது எதற்காக அதை நான் திரும்பப் பெற வேண்டும் என்ற கேள்வி கேட்டு இருக்கின்றார் என தெரிவித்தார்.