ஐநா அதிகாரிகள் 2 பேரை கொன்ற குற்றவாளிகள் 51 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து கொண்டிருக்கின்றது. இதன் காரணமாக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவானது. இந்த கிளர்ச்சியாளர் குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த குழுக்களை ஒழிப்பதற்காகவும் , நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை மீட்டேடுத்து அமைதியை ஏற்படுத்தவும், உள்நாட்டு படையுடன் ஐநா படையினரும் சேர்ந்து தீவிரதேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.இதனிடையே 2017 ஆம் ஆண்டு கசை மாகாணத்தில் அரசு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இது தொடர்பாக ஐநா சபைக்கு அறிக்கை அளிப்பதற்காக விசாரணை அதிகாரிகளாக அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் ஷார்ப் மற்றும் ஸ்வீடனைச் சேர்ந்த ஷைடா ஹடலன் செயல்பட்டனர்.
விசாரணை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கசை மாகாணத்தில் காரில் சென்றபோது கிளர்ச்சி கும்பலால் கடத்தப்பட்டனர்.இதையடுத்து அதிகாரிகள் இரண்டு பேரும் 2017 மார்ச் 28ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அந்த மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் வனப்பகுதியில் அதிகாரிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த கொலை சம்பவத்தால் ஐநா அமைப்பு அதிர்ச்சிக்கு உள்ளானது. இந்தகொடூர கொலைசம்பவத்தில் தொடர்புடையதாக 54 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .இந்நிலையில் இந்த கொலை வழக்கு பல ஆண்டுகளாக காங்கோ ராணுவ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வெளியானது.
அதில் குற்றம் சாட்டப்பட்ட 54 பேரில் 51 பேர் குற்றவாளிகள் எனவும், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க கோர்ட் உத்தரவிட்டது. இந்த கொலை வழக்கில் 22 குற்றவாளிகள் இன்னும் தலைமறைவாக உள்ளனர். தலைமறைவாக இருப்பவர் களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . காங்கோவில் தூக்கு தண்டனைக்கு எதிராக சட்டம் உள்ளதால் இந்த தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட வாய்ப்பு இருக்கிறது .