கூட்டத்தில் உக்ரைன் அதிபர் காணொளி மூலம் பேசுவதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொது சபையில் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டம் செப்டம்பர் மாதம் 21- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் தற்போது உக்ரைன் நாட்டில் போர் பதற்றம் நிலவுவதால் அதிபர் இந்த கூட்டத்தில் நேரில் கலந்து கொள்ள முடியாது. உலகத் தலைவர்களிடம் உக்ரைன் அதிபர் காணொளி மூலம் உரையாற்ற அனுமதிக்குமாறு ஐ.நா. பொது சபையில் உக்ரைன் வலியுறுத்தியது. இது தொடர்பான முன்மொழியை 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொது சபை வெள்ளிக்கிழமை அன்று பரிசீலனை செய்தது. அப்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரின் காரணமாக அதிபர் நேரில் பங்கேற்க முடியாது.
இதனால் அவர் காணொளி மூலம் தலைவர்களுடன் உரையாட வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறப்பட்டது. இதுகுறித்து ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா புதன்கிழமை கூறியதாவது. வீடியோ மூலம் உக்ரைன் அதிபர் பேச அனுமதிப்பதை ரஷ்யா ஏற்காது என கூறினார். ஆனால் நடைபெற்ற வாக்கெடுப்பில் 193 நாடுகளைக் கொண்ட சபையில் இந்தியா உள்ளிட்ட 101 நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்தது. அதன் பின்னர் உக்ரைன் அதிபர் வீடியோ மூலம் உலகத் தலைவர்களுடன் உரையாற்றுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.