Categories
மாநில செய்திகள்

ஐ.நா வரை சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரம்…! அதிரடி காட்ட போகும் சிபிஐ …!!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்குப்பதிந்து விசாரணை துவங்கியுள்ளது.

சிபிஐ இயக்குனர் ரிஷிகுமார் சுக்லா நேரடி பார்வையில் விசாரணை நடைபெற உள்ளது. டெல்லி சிபிஐ இரண்டாம் பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஏற்கின்றனர். தந்தை – மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக தனித்தனியே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 176 1-A ( 1 ) என்ற பிரிவில் காவல் மரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே சிபிஐ முதல் தகவல் அறிக்கை உள்ளது.

சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு விவகாரம்: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்- Dinamani

சிபிசிஐடி விசாரணை அறிக்கை அடிப்படையிலோ அல்லது சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை அடிப்படையிலோ வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.அதேநேரத்தில் சட்டவிரோதமாக பிடித்தல், கொலை, மற்றும் சாட்சியங்களை அழித்தல் போன்றவை குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்து, அடுத்த கட்டமாக வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி சிபிஐ அதிகாரிகளிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரது மரணம் தேசிய அளவில் மட்டுமின்றி ஐநாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையடுத்தே டெல்லி சிபிஐ அதிகாரிகள் வழக்கை கையில் எடுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து சிபிஐ விசாரிக்க உள்ளது. மேலும் சிறைத்துறை அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |