மதுரையில் ஐ படம் போல இளைஞர் ஒருவருக்கு நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் நகை பட்டறையில் வேலை பார்த்து வரும் பிஸ்வஜித் என்ற இளைஞர் கடந்த மாதம் சுண்டுவிரலில் அடிபட்டு விட்டதாக மருத்துவரிடம் சென்றார். அவர் கொடுத்த எலும்பு முறிவு மருந்தை அந்த இளைஞர் தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். அதனால் பக்க விளைவு ஏற்பட்டு அவரின் உடல் முழுவதும் அலர்ஜியால் தடித்து விட்டது.
அதன் பிறகு தோல் சிகிச்சை மருத்துவரிடம் சென்றபோது அவர் தந்த மருந்தும் பக்க விளைவுகளை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது அவர் அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஐ படம் போல யாராவது செய்த சதி செயலா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.