ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்வியை சந்தித்தது ஏன்? என்று ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் ஐந்தாவது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வலிமையான அணிகளாக பார்க்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகின்றது. முதல் 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் ஐந்து போட்டிகளிலும் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த தோல்வி ஏன் என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய டெல்லி அணியின் துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் விளக்கம் அளித்துள்ளார். மும்பை தொடர்ந்து தோல்வி அடைந்து பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் மெகா ஏலத்தில் சரியாக செயல்படவில்லை. மும்பை வீரர் இஷான் கிஷானுக்கு ரூ.15.25 கோடி செலவு செய்துள்ளனர். அவர் திறமையான வீரர் தான். ஆனால் இத்தனை சம்பளத்தை கொடுத்து அவரை வாங்கி இருக்க வேண்டியது இல்லை. அதேபோல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்சரை எடுத்ததும் மும்பைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது என்று வாட்சன் விளக்கமளித்துள்ளார்.