புனேயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டின் 14 ஆவது லீக் ஆட்டம் நடைபெற இருக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. இந்நிலையில் 5 முறை வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 2 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இதனால் வெற்றியை அடைய வேண்டும் என்ற குறிக்கோளில் மும்பை இந்தியன்ஸ் அணி உறுதியாக இருக்கிறார்கள். இந்த அணியில் திலக் வர்மா, கிஷன் ஆகியோர் சிறந்த முறையில் பேட்டிங் செய்வார்கள்.
இதனையடுத்து மில்ஸ், அஸ்வின், முருகன், பும்ரா ஆகியோர் பந்து வீச்சில் களமிறங்குகிறார்கள். இந்த மேட்சில் மும்பை இந்தியன்ஸ் தோல்வி அடைந்தால் இனிவரும் மேட்சில் மிகவும் சவாலான நெருக்கடியை சந்திக்க நேரிடும். மேலும் கொல்கத்தா அணி நடைபெற்ற 3 மேட்சில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த அணியில் ஆந்த்ரே ரஸ்சல், நிதிஷ் ரானா, வெங்கடேச ஐயர், ஸ்ரேயாஸ் அய்யர், ரகானே ஆகியோர் பேட்டிங்கில் களம் இறங்குகிறார்கள். அதன்பின் வருண் சக்கரவர்த்தி, சுனில் நவீன், உமேஷ் யாதவ் ஆகியோர் பந்து வீச்சில் களம் இறங்குகிறார்கள்.