Categories
உலக செய்திகள்

ஐ லவ் யூ சொன்ன கணவன்… ஆசையாய் சென்ற மனைவி…. காத்திருந்த அதிர்ச்சி …!!

பிரிந்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

பிரிட்டனை சேர்ந்த லின்சி என்பவரது கணவர் ஜேம்ஸ் இவர்கள் இருவரும் 14 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றனர். இதனிடையே லின்சிக்கு  உதவி செய்வதாக குறுஞ்செய்தியில் உறுதியளித்து அவருடன் சேர்ந்து வாழ யோசிப்பதாக ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து தனது கணவனுடன் மீண்டும் சேர்ந்து விடலாம் என்று லின்சி அளவுக்கு அதிகமான நம்பிக்கையில் தனது கணவரை சந்திக்க சென்றுள்ளார்.

அவர் வீட்டுக் கதவைத் தட்டிய போது சண்டெல்லே என்ற பெண் வந்து கதவைத் திறந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த லின்சி ஜேம்ஸ் நண்பர்கள் அவர் வேறு ஒருவருடன் வாழ்வதாக கூறியதை தற்போது நம்ப தொடங்கினார். இருந்தாலும் உண்மை என்ன என்பதை தெரிந்துகொள்ள வீட்டிற்குள் சென்றார். அந்தப் பெண்ணிடம் தனது கணவர்ஜேம்ஸ் பார்க்க வந்ததாக கூறியுள்ளார் அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்த நிலையில் அங்கு வர இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஜேம்ஸின் நெஞ்சில் லின்சி தனது நகத்தால் குத்தி கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் லின்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஜேம்ஸ் அனுப்பிய குறுஞ்செய்திகள் முதலியவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தனது கணவருடன் சேர்ந்து வாழும் ஆசையாக குறுஞ்செய்திகளை நம்பி அவர் ஏமாந்ததை நீதிபதியிடம் லின்சி தெரிவித்தார்.

இதுகுறித்து நீதிபதி பேசுகையில் லின்சி கொடூர குணம் கொண்டவர் இல்லை என்றும் இதற்கு ஏற்கனவே அவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதாகவும் இதற்கு முன்பாக எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்றும் கூறி லின்சிக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதித்து ஐந்து வருடங்கள் அவரது கணவரை சந்திக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |