Categories
மாநில செய்திகள்

ஒகேனக்கலில் மீண்டும் படகு போக்குவரத்து தொடக்கம்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!

படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்ததால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தற்போது குறைந்துள்ளது. இங்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மணல்திட்டு மற்றும் கோதிக்கல்பாறை பகுதிகளில் படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கங்கா பூஜை முடிவடைந்த பிறகு படகு சவாரி சிறப்பாக தொடங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |