Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒகேனக்கலுக்கு காவிரி நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகரிப்பு!!

ஒகேனக்கலுக்கு  வரும்  காவிரி  நீர்வரத்து 9,500 கன அடியாக அதிகாரித்துள்ளதால் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது .

கர்நாடக  மாநிலத்தின் காவிரி  நீர்ப்பிடிப்பு  பகுதிகளில் தொடர்ந்து   கனமழை  பெய்துவருவதால்  அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்துள்ளது .மேலும் காவிரி  அணைக்கு   கிருஷ்ணராஜசாகர்  மற்றும்   கபினி  அணையில்  இருந்து  தண்ணீர்  திறந்துவிடப்படுகிறது . இந்நிலையில் காவிரிக்கு  வரும்  தண்ணீரின்  அளவை  பிலிகுண்டுலுவில் மத்திய  நீர்வளத்துறை  அதிகாரிகள்  அளவீடு  செய்து  வருகின்றனர் .

ஒகேனக்கல்லில்  மெயின் அருவி உட்பட  5 அருவிகளிலும் தண்ணீர்   கொட்டுவதால் சுற்றுலா பயணிகள்  குவிந்த வண்ணம் உள்ளனர் .ஒகேனக்கல்லில் நேற்று  மாலை  இருப்பு  படி தண்ணீரின்  அளவு  வினாடிக்கு  9,500 கன  அடியாக  இருந்தது .இதனால்  பாதுகாப்பு  கருதி 9 வது நாளாக இன்றும்  படகு  போக்குவரத்துக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது . மேலும்  மேட்டூர்  அணைக்கு  நீர்வரத்து  அதிகரித்துக்கொண்டிருக்கிறது .

நேற்று நீர்வரத்து  வினாடிக்கு 8,900 கன  அடியாக  இருந்த நிலையில்   இன்று  நிலவரப்படி 9,200 கன  அடியாக  நீர்வரத்து உயர்ந்து  வருகிறது .மேலும் நீர் மட்டம் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணிர் வெளியேற்றப்படுகிறது .அதிலும் அணைக்கு வரும் நீர்வரத்தை  விட குறைவாகவே திறந்து விடப்படுவதால் நீர்மட்டம் உயர்ந்து  வருகிறது.மேலும் கடந்த 9 நாட்களில் 8.54  அடி உயர்ந்து  47.67 அடியாக உயர்ந்துள்ளது. இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டிருந்தால்  முன்று நாட்களில் 50 அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |