தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 14 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றல் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். மேலும் அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
Categories