தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லுக்கு சென்று சினிபால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. மேலும் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Categories