Categories
சினிமா தமிழ் சினிமா

ஒகேனக்கல் அருகில் “தங்கலான்” சூட்டிங்…. காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்த படக்குழுவினர்…. வெளியான டுவிட் வீடியோ…!!!!

பா.ரஞ்சித் டிரைக்டில் விக்ரம் நடித்துவரும் திரைப்படத்தின் தலைப்பு அறிமுக வீடியோவானது அக்..23 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்துக்கு தங்கலான் என பெயரிடப்பட்டு இருக்கிறது. கோலார் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் அடைந்த துயரத்தை இப்படம் பேசுவதாக கூறப்படுகிறது. அத்துடன் டீசரிலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்டக் காலத்தில் நடைபெறும் கதை என டீசர் வாயிலாக நமக்கு தெரியவருகிறது. இதற்கிடையில் நீண்ட இடைவேளைக்கு பின் தமிழில் பார்வதி நடிப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் படக்குழுவினருடன் விக்ரம் காவிரி ஆற்றில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டு அவர் கூறியதாவது “இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் சூட்டிங். கடினமாக இருந்தது என கூறினால் அது மிகையாகாது. “பேக் அப்” என கேட்டதும் தண்ணீரில் ஒரே குதி. இதனிடையில் என் நண்பர்களை விடுவேனா?.. அய்யோ வேண்டாம் என பதறிய சில பேர் கடைசியல் தண்ணீரை விட்டுவர மறுத்துனர்.

Categories

Tech |