Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில்… நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி குறைந்தது… பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை….!!!

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து வினாடிக்கு 25,000 கனஅடி குறைந்தால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்த கன மழையால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. இதற்கிடையில் கடந்த 19ஆம் தேதி ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வினாடிக்கு 50,000 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் அதிகமாக வந்தது. இதனால் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் மெயின் அருவிக்கு செல்லும் நுழைவாயில் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்று விட்டதால் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சிக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 25,000 கன அடி நீர்வரத்து குறைந்துள்ளது. இந்த நீர்வரத்தை கர்நாடக தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையில் அருவியில் குளிக்கவும் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் காவிரி கரையோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.

Categories

Tech |