தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர் வரத்து 20,000 கன அடியாக குறைந்துள்ள நிலையில் அருவியில் நீராடவும் பரிசலில் சவாரி செய்யவும் சுற்றுலாப்பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக வரும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே சுற்றுலா மையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. எஸ். மலர்விழி தெரிவித்துள்ளார்.
Categories