Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவின் கவர்னருக்கு கொரோனா… மனைவிக்கும் தொற்று உறுதி…!!!

ஒடிசா மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு தற்போது உச்சம் தொட்ட நிலையில் இருக்கின்றது. அம்மாநிலத்தின் கவர்னர் மற்றும் அவரின் மனைவிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒடிசாவின் மதிப்பிற்குரிய கவர்னர், பேராசிரியர் ஸ்ரீ கணேஷ் லால் ஜி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

ஒடிசாவின் மதிப்பிற்குரிய முதல் பெண்மணியான சுசீலா தேவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். அவர்கள் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக்கொள்கிறேன்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |