ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், 21 வயதுடைய வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை கோவைக்கு கடத்தி வந்து வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து ஆசை வார்த்தைகள் கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையில் மகளை காணவில்லை என ஒடிசாவில் இருக்கும் சதார் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமி கோவையில் இருப்பதை அறிந்து விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் இருவரையும் மீட்டு ஒடிசாவுக்கு அழைத்து சென்றனர். கடந்த 7 மாதமாக சிறுமியுடன் வாலிபர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.