Categories
தேசிய செய்திகள்

ஒடிசாவில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம்…!!!

ஒடிசாவில் அடுத்து வரும் இரு தினங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” வடக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்டை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த ஐந்து நாட்களில் மேற்கு- வட மேற்காக இது நகரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் ஒடிசா, மேற்கு வங்க கங்கை கரையோரப் பகுதி மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய பகுதிகளில் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி வரை கனமழை பெய்யும்.

மேலும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் வருகின்ற 26 ஆம் தேதி முதல் 28ம் தேதி வரையில் கன மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. வரும் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் ஒடிசாவிலும், அடுத்த 27ம் தேதி சட்டிஸ்கர் இன்னும் அதிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது” என்று கூறியுள்ளது.

Categories

Tech |