ஒடிசா முதல் மந்திரியுடன் நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக கனிமொழி எம் பி சந்தித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நீட்தேர்வை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பாஜக ஆட்சியில் இல்லாத 12 மாநிலங்களை ஒன்றிணைத்து நீட் தேர்வுக்கு எதிராக ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை, திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்பி நேரில் சந்தித்து பேசினார்.
அப்பொழுது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி எழுதிய கடிதத்தையும், நீட் தேர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ கே ராஜன் குழு வெளியிட்ட அறிக்கையையும் நவீன் பட்நாயக்கிடம் வழங்கினார்.