Categories
தேசிய செய்திகள்

ஒடிசா: “வேட்பாளர்களுக்கு தேர்வுகளுக்கு கிராம மக்கள்…!!” ஒரு சுவாரசியமான தொகுப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர் மாவட்டத்தில் மாலுபட்டா எனும் கிராமத்தில் பெரும்பாலும் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புக்கு தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 9 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கிராம மக்கள் வாய் மொழி மற்றும் எழுத்து தேர்வு நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி வேட்பாளர்களுக்கு ஒரு பள்ளிக் கூடத்தில் வைத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் அவர்களுக்கு ஏழு கேள்விகள் கேட்கப்பட்டன. 30 நிமிடம் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

முதல் 15 நிமிடத்தில் அவர்கள் கேட்கப்படும் கேள்விக்கு வாய்மொழியாக பதில் அளிக்கவேண்டும். தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேர்வில் 8 வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்.? மற்றும் அரசியலுக்குள் நுழைவதற்கு நீங்கள் என்னென்ன நலத்திட்டங்கள் செய்துள்ளீர்கள்.? போன்ற கேள்விகள் இதில் கேட்கப்பட்டுள்ளன.!” என கூறினர்.

Categories

Tech |