ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி புகழாரம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” நலிந்த ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாடுபட்டார். பெண்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். அவருடனான என்னுடைய சந்திப்புகள் எப்போதும் நேசத்திற்குரியவையே” என்று ஜெயலலிதா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.