உரிமையாளர் மீது கொண்ட விசுவாசத்தால் 62 மைல் தூரம் ஏழு நாட்கள் கடந்து வந்த ஒட்டகம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் தன்னைப் வளர்த்தவர்கள் மீது அளவுகடந்த விசுவாசம் கொண்டிருந்த ஒட்டகத்தை அதன் உரிமையாளர் 100 மைல் தொலைவில் வேறு ஒருவருக்கு அக்டோபர் மாதம் விற்பனை செய்துள்ளார். ஆனால் அந்த ஒட்டகம் விற்கப்பட்டு எட்டு மாதங்கள் கழித்து கடந்த மாதம் 27 ஆம் தேதி தனது புதிய உரிமையாளரிடமிருந்து வெளியேறி தனது பழைய உரிமையாளரை கண்டுபிடிப்பதற்காக கூர்மையான வேலிகள், பாலைவனங்கள், அதோடு பரபரப்பான சாலைகள் போன்றவற்றையெல்லாம் கடந்து வந்துள்ளது அந்த ஒட்டகம். இறுதியாக அது தனது பழைய உரிமையாளரின் ஊருக்குள் வர மற்றொரு ஒட்டகம் மேய்ப்பவர் அதனைக் கண்டு அதன் உரிமையாளரிடம் அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.
இதனைக் கண்ட ஒட்டகத்தின் பழைய உரிமையாளர்கள் அதன் விசுவாசத்தை நினைத்து கண் கலங்கினர். ஒட்டகத்தை யாரிடம் விற்பனை செய்தனரோ அவரை தொடர்பு கொண்டு தங்களுக்கு வேறு ஒரு ஒட்டகத்தை தருவதாகவும், இதனை தாங்களே வைத்துக் கொள்ள முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு இனி நாங்கள் இதனை விற்க மாட்டோம் எனவும் உறுதியளித்துள்ளனர். தனது உரிமையாளர் மீது கொண்ட பாசத்தால் அந்த ஒட்டகம் ஏழு நாட்கள் யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக தனது பழைய வசிப்பிடத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.