ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் ஒட்டகத்தில் பயணித்து சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் கிராம மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்.
இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பெரும் உதவியாக இருந்தது தடுப்பூசி மட்டுமே. இதனால் அனைத்து மாநில மக்களும் தொடர்ந்து தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று அரசு வலியுறுத்தி வருகின்றது. இருப்பிடம் கிராமப்புறங்களை சேர்ந்த மக்கள் தடுப்பூசி செலுத்துவதற்கு தொடர்ந்து தயக்கம் காட்டி வரும் நிலையில், அவர்களுக்கும் சுகாதார துறை ஊழியர்கள் நேரில் சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் சுகாதார துறை பணியாளர் ஒருவர் ஒட்டகத்தில் பயணித்து தடுப்பூசி போட்டு வருகிறார். இந்த புகைப்படத்தை சுகாதாரத்துறை மத்திய அமைச்சர் மன்சூர் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்த பலரும் அவருக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.