Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற தொழில் திறன் பயிற்சி திருவிழா”…. எம்எல்ஏ பங்கேற்பு….!!!!!

ஒட்டப்பிடாரத்தில் இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சி திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பாக இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி திருவிழா டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்டம் மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் தலைமை தாங்க ஒட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.சி.சண்முகையா எம்எல்ஏ பங்கேற்று குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை ஆரம்பித்து வைத்தார். பின் வேலைவாய்ப்பு பயிற்சி நேர்காணலில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்எல்ஏ கொடுத்தார். இப்பயிற்சி முகாமில் அரசு அலுவலர்கள், மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Categories

Tech |