ஒட்டிப் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து பிரித்த நிலையில் தற்போது அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மிச்சிகன் நகரில் பிகில், அலிசன் என்ற கணவன் மனைவி தன் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அலிசன் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவர் வயிற்றில் உள்ள குழந்தை நலனை அறிந்து கொள்ள ஸ்கேன் செய்யும்போது இணைந்திருக்கும் இரட்டை குழந்தைகள் என்பது தெரியவந்தது. இதனைக் கேட்ட அலிசன் மற்றும் அவரது கணவர் பதறினர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது ஒரு சிலருக்குதான் இவ்வாறு இருக்கும், குழந்தைகள் குறித்து என்ன முடிவு செய்துள்ளீர்கள் எனக் கேட்டனர்.
அதற்கு குழந்தையின் பெற்றோர் பிறப்பதற்கு முன்னதாகவே இவ்வாறு ஒட்டியிருக்கும் குழந்தைகள் வாழ்க்கையில் எப்போதும் ஒருவரின் மீது ஒருவர் அன்பாக இருப்பார்கள் என கூறி குழந்தைகளை பெற்றுக் கொள்வதாக கூறினார்கள். இந்நிலையில் ஆறாவது மாதம் ஸ்கேன் செய்யும்போது குழந்தைகளின் இருதயம் தனித்தனியாக உள்ளது ஒன்றாக ஒட்டியிருக்கவில்லை. எனவே அவர்கள் பிறந்த உடன் இருவரையும் தனித்தனியே பிரித்தாலும் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழாது எனக் கூறினர்.
மீண்டும் எட்டாவது மாதம் ஸ்கேன் செய்யும்போது தாயின் தொப்புள் கொடியின் வழியாக செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதால் உடனடியாக அறுவை சிகிச்சை முறையில் குழந்தைகளை எடுக்க முடிவு செய்தனர். அப்போது பூமிக்கு வந்த அந்த குழந்தைகளை தன்னுடைய இரண்டாவது வயதில் தனித்தனியாக பிரிக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனித்தனியே பிரிக்கப்பட்ட அந்த குழந்தைகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அது குழந்தைகள் தனித்தனியே பிரிந்து இருந்தாலும் அன்பில் அவர்கள் பிரியவில்லை என்பதை உணர்த்துவது போல் அமைந்துள்ளது.