இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் பெகாஸஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் மட்டும் பத்திரிகையாளர்களின் செல்போன்கள் உட்பட 300 தொலைப்பேசிகள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்திலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்நிலையில் சுமார் 150 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 நாட்களாக போராடி வருகிறோம், ஒட்டுக்கேட்டது குறித்து ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுக்கிறது ஒன்றிய அரசு. ஒட்டுக்கேட்கத் துடிக்கும் அரசு நாங்கள் நேரடியாக பேசுகிறோம் என்றால் மறுப்பது ஏன்? என் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.