Categories
மாநில செய்திகள்

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பு…. நடிகர் விவேக் மறைவிற்கு டிடிவி தினகரன் இரங்கல்….!!!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக்  காலமானார்.

இன்னும் சற்று நேரத்தில் அவரின் உடல் இல்லத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக விளங்கியவர். இவர் இறுதியாக 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பத்மஸ்ரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

அதன்படி டிடிவி தினகரன் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் திரு விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பு. அந்த அளவிற்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் திகழ்ந்தவர். ஜனங்களின் கலைஞன் என கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |