Categories
உலக செய்திகள்

ஒட்டு மொத்த நாடே கண்ணீரில்…. ஆனா பிரதமர் வீட்டில் மட்டும் இப்படி?…. பிரிட்டனை அதிர வைத்த குற்றச்சாட்டு….!!!!

பிரிட்டன் மகாராணியார் கணவரை இழந்த போது பொதுமுடக்க விதிகளை மீறக் கூடாது என்பதால் தனிமையில் துக்கம் அனுசரித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் பிரதமர் இல்லத்தில் பார்ட்டி ஒன்று நடந்ததாக அதிர வைக்கும் குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்தினம் மதுபான பார்ட்டி ஒன்று பிரதமர் இல்லத்தில் நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் அரசியல் ஊழியர்களும், அரசின் ஆலோசகர்களும் அதிக அளவில் மது அருந்திவிட்டு நடனமாடி இருக்கிறார்கள்.

ஒட்டு மொத்த பிரிட்டனே அன்றைய தினம் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்காக துக்கம் அனுசரித்துக் கொண்டிருந்தது. மேலும் பொது முடக்கம் அமலில் இருந்ததால் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய தினம் விதிகளை மீறி பிரதமர் இல்லத்தில் பாட்டி நடந்துள்ளது. ஏற்கனவே போரிஸ் ஜான்சன் பதவியேற்றதில் இருந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரிட்டனை அதிர வைக்கும் அளவிற்கு போரிஸ் ஜான்சனின் மனைவி பொதுமக்கள் பணத்தில் வீட்டை அலங்கரித்தது தொடங்கி இளவரசர் பிலிப்பின் மரணத்தால் மகாராணியார் துக்கம் அனுசரித்து கொண்டிருந்த வேளையில் அவருடைய வீட்டில் பார்ட்டி நடந்தது வரை பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் அவருடைய பிரதமர் பதவிக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படலாம் என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |