Categories
உலக செய்திகள்

ஒட்டு மொத்த நாடே கண்ணீரில்?…. நிம்மதி இல்லாமல் தவிக்கும் மக்கள்?…. நிபுணர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

மியான்மரில் தேசிய ஜனநாயக கட்சித் தலைவர் ஆங் சான் சூகி கடந்த 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தார். ஆனால் ராணுவம் இந்த ஆட்சியை கவிழ்த்து ஆங் சான் சூகி உட்பட அரசியல் தலைவர்கள் பலரையும் கைது செய்தது. மேலும் பல்வேறு வழக்குகளும் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை ஆங் சான் சூகிக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.

அதனை தொடர்ந்து ராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சான் சூகியின் அரசியல் வாழ்க்கையை நிர்மூலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து நேற்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இருப்பினும் மியான்மரில் பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 1,500 பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 8,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறி தற்போது தவித்து வருகின்றனர். எனவே மியான்மர் உள்நாட்டு போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே அந்நாடு அமைதி நிலைக்கு உடனடியாக திரும்ப வாய்ப்பில்லை. மியான்மர் அமைதியான சூழ்நிலைக்கு மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |