அப்படி நிலைமை இருக்கும்போது ஏன் தொலைக்காட்சி நண்பர்கள் ஏன் இதுபோன்று தவறான தகவல்களை பதிவிட வேண்டும். இதற்கு ஆவணம் என்ன என்பதை சிந்திக்கின்றபோது, இன்றைக்கு ஆளுகின்ற திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு தொலைகாட்சிகள் அத்தனையும் செயல்பட்டு கொண்டிருப்பது என்பது வெட்டவெளிச்சமாக தெரிந்து இருக்கிறது.
ஆகவே, தொலைக்காட்சி நண்பர்கள் திருத்திக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் இன்றைக்கு தவறான செய்திகளை வெளியிட்ட தொலைகாட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்பதை இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதோடு மட்டுமல்லாமல் இன்றைக்கு தொடர்ந்து, மாண்புமிகு திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடந்த பொங்கல் நேரத்திலே ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 2,500 ரூபாய் வழங்கினார்கள்.
எனவே திமுக அப்படி பணம் கொடுக்காமல் பொருட்கள் மட்டும் கொடுத்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சனை செய்து கொண்டிருக்கின்ற இந்த சூழலை மறைக்க வேண்டும், அதை பற்றி மக்கள் பேசக்கூடாது என்ற உள்நோக்கத்தோடு இன்றைக்கு ஊழல் பிரிவுகளை அனுப்பி பொய்யான வழகுகளை பதிவு செய்து இங்கே நடவடிக்கை எடுக்கப்படும் என்று சோதனை மேற்கொண்டார்கள் என்பதை நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல இங்கே மீண்டும் ஒரு முறை சொல்கின்றேன், இந்த சோதனையிலே பொருளோ, நகையோ, பணமோ எதுவும் கைப்பற்றபடவில்லை என்று எழுதி வருகை தந்த அத்தனை அலுவலர்களும் கையொப்பமிட்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.