Categories
உலக செய்திகள்

ஒத்துழைக்காத அரச குடும்பம்…. மனம் திறந்த ஹாரி,மேகன்…. அதிர்ச்சி…!!!

அரண்மனையில் இருந்து வெளியேறிய இளவரசர் ஹாரி, மேகன் மனம் திறந்து பேசியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகனும் காதலித்து கடந்த 2011ஆம் ஆண்டு அரச குடும்பத்தின் ஒப்புதலோடு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரம் மீது அதிக பற்று இல்லாமல் இருந்து வந்த ஹாரி -தம்பதி, அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வரும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆர்ச்சி என்ற 2 வயது மகன் இருக்கும் நிலையில், தற்போது மேகன் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். அரண்மனையிலிருந்து அவர்கள் வெளியேறியது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் முதன்முறையாக அரச குடும்பம் தங்களை மோசமாக நடத்தியதாக மனம் திறந்துள்ளனர். கருவிலிருக்கும் எவ்வளவு கருப்பாக இருக்கும் என்று பேசியது, பாதுகாப்பு கொடுக்க மறுத்தது. அரசு அங்கீகாரம் கொடுக்கப்படாது உள்ளிட்ட பல இழிச் சொற்களுக்கு ஆளானதாக கூறியுள்ளனர். மேலும் இதை தற்கொலை எண்ணத்தை தூண்டியதாக மேகன் தெரிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |