Categories
அரசியல்

“ஒத்த செருப்பை வேண்டுமானால் வந்து பெற்றுக் கொள்ளலாம்”… அமைச்சர் ட்வீட்… முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை…!!!!!!

மதுரையில் ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசு நிகழ்ச்சியில் நேற்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். அதனை அடுத்து மதுரை விமான நிலையம் நோக்கி வந்த போது அவரது காரை பாஜகவினர் வழிமறைத்துள்ளனர். அப்போது பாரத் மாதா கி ஜே எனவும் கோஷமிட்டு கொலைவெறியுடன் அந்த காரை நோக்கி பாய்ந்துள்ளனர். அதன் பின் அந்த கும்பலில் இருந்த பெண் ஒருவர் ஏற்கனவே திட்டமிட்டபடி அவர் அணிந்திருந்த செருப்பை கையில் எடுத்து வைத்திருந்த நிலையில் அமைச்சர் கார் மீது வீசி உள்ளார். மேலும் பாஜகவினர் அசிங்கமான வார்த்தைகளால் அமைச்சரை திட்டி தீர்த்துள்ளனர்.

இந்த நிலையில் கார் அங்கிருந்து புறப்பட்ட பின்னரும் பின்னாடியே ஓடி கலாட்டாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்திற்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ட்விட் போட்டுள்ளார். அதில் அந்த பெண்ணின் ஒத்த செருப்பை எனது ஊழியர்கள் பாதுகாப்பாக எடுத்து வைத்திருக்கின்றனர். வேண்டுமானால் வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு உண்மையாக அஞ்சலி செலுத்த நினைத்து இருந்தால் அவரது வீடு தேடி சென்று இறுதி வணக்கம் செலுத்த வேண்டும்.

ஆனால் தேசியக்கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பை வீசி விடுதலை  நாளில் பவள விழா மகத்துவத்தை மலினப்படுத்தியுள்ளார்கள். தங்களின் தரம் என்ன என்பதையும் தங்களின் தேசபக்தியை எத்தனை போலி என்பதையும் வெளிப்படுத்தி உள்ளார்கள். அரசின் மனமார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில் அரசியல் விளம்பரம் தேடும் வகையில் பாஜகவினர் குவிந்துள்ளனர். போகின்ற வழியில் ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்துவது போல அரசியல் லாபம் தேட முயற்சி செய்திருக்கின்றது. மேலும் தேசிய கொடியை அவமதித்து கலவரம் செய்ய முயற்சி செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து சமூக விரோதிகளை கொண்டு அரசியல் வீணர்கள் செய்யப்பட்டால் சட்டத்திலிருந்து தப்ப முடியாது. மேலும் தமிழ்நாட்டில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் இது தமிழ்நாடு இங்கே உங்கள்  அரசியல் விளையாட்டு எடுபடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |