திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு இம்மாதம் அதிக வருவாய் கிடைத்துள்ளது. உலக அளவில் பிரசித்தி பெற்ற திருப்பதி கோயிலில் கடந்த மே மாதத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதால் புதிய சாதனையான பார்க்கப்படுகிறது. திருப்பதி கோயில் வரலாற்றில் முதன்முறையாக இவ்வளவு பெரிய தொகை காணிக்கையாக கிடைத்துள்ளது. பணம், தங்கம், வெள்ளி ஆபரணங்களாக கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் கோயில் வருமானம் வெகுவாக குறைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், வருமானம் உயர்ந்துள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.