Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல…! சாதாரண வலி தான்…! மருத்துவரின் அலட்சியம்… நீலகிரியில் குழந்தை பலி ….!!

உதகை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இளி துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி அவரது மனைவி நாகமணிக்கு பிரசவத்திற்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் தனது மனைவியை பரிசோதிக்குமாறு அருள்நாதன் கேட்டுள்ளார்.

இதனையடுத்து நாகமணியை பரிசோதித்துவிட்டு சாதாரண வலி தான் சுகப் பிரசவம் ஆகிவிடும் என மருத்துவர்கள் மெத்தனமாக அருள் நாதனிடம் கூறி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை நாகமணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் உயிரிழப்பு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உடலை வாங்காமல் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |